கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.
மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் இடையே ஜாதி மதம் பாகுபாடு காட்டக்கூடாது. சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் பழக வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், சைபர் கிரைம் பற்றியும், மற்றும் எதிர் காலத்தில் நல்ல நிலையினை அடைய மாணவ மாணவிகள் தங்களது இலக்கினை அடைய நன்றாக படித்து வெற்றியடையுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியல் பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


