தூத்துக்குடியில் ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலை சீர்செய்தல் என்ற ஒரு வார கால உள்வாளகப் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலை சீர்செய்தல் பற்றிய பயிற்சி” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியை 04.09.2023 முதல் 12.09.2023 வரை நடத்தியது.
இதன் நிறைவு விழா தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 30 மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீதிச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு மீன்வளக் கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை வகித்தார். மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளர் சுவர்ணலதா சிறப்பு விருந்திராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜ், மாவட்டத் திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜய நிர்மலா, மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் இரவிக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார். அத்துறையின் உதவி பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரகாகர், முதுநிலை ஆராய்ச்சியாளர் சே. அர்ச்சனா, மற்றும் செல்வி த. சுந்தரேஸ்வரி ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.


