தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாரிமுத்து (36), இவர் தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேலுநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காவிரி மகன் மதியழகன் (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


