தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாளை “பாரத உலா மற்றும் காட்சி அரங்கம்” நடைபெற உள்ளது.
தூத்துக்குடி சிதம்பர நகர், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய நமது தூத்துக்குடி நகரைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் சக்தி விநாயகர் இந்து வித்யாலயா CBSE மேல்நிலைப்பள்ளி, சேவலாயா அறக்கட்டளை மற்றும் சுபா கிராபிக்ஸ், இணைந்து வழங்கும் “பாரத உலா மற்றும் காட்சி அரங்கம்” நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்விற்கு பொதுமக்கள், அனைத்து சமுதாய சங்க பெருமக்கள் உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊடக நண்பர்கள், தொழிலதிபர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், வீட்டு முகம்பையர், குழந்தைகள் என அனைவரும் வருகை தந்து, நமது விடுதலை வீரர்களுக்கு மலர் அஞ்சலி மரியாதை செலுத்தி, கண்காட்சியினை கண்டுகளித்து மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சியை ஊக்கப்படுத்துமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


