தூத்துக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான ஓவியம் மற்றும் நடன போட்டிகளில் டிஎன்எம்எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி மாணவ மாணவியர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் 122 வதுபிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடந்தன. ஜேசிஐ பியல் சிட்டி சார்பில் மாவட்ட அளவிலான கேன்வாஸ் பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலை போட்டிகள் நடந்தன. மேலும் சுவாமி விவேகானந்தா வைபவ் -நிகழ்ச்சியை முன்னிட்டு சாரதா பள்ளி, லலிதா வித்யாலயா சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் நடந்தன.
இவற்றில் ஓவியம் மற்றும் கேன்வாஸ் பெயிண்டிங் போட்டிகளில் டிஎன்எம்எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவி சமிக்ஷா முதலிடம் பெற்றார். மேலும் சுவாமி விவேகானந்தா வைபவ் கலை உற்சவ போட்டிகளில் குழு நடனப்போட்டிகளில் டிஎன்எம்எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி மாணவர்கள் பிரதீபா, கீர்த்தனா, ராஜேஷ்வரி, டேலியா, ஜவஹர்லால் நேரு, தீபன் ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை டிஎன்எம்எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி செயலர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.பி. மாரியம்மாள், துணை தலைமையாசிரியை சி. வாசுகி, மற்றும் ஆசிரியைகள் இனிகோகர்டோசா,மனோகரிசுப்புலட்சுமி மற்றும் பெற்றோர் பாராட்டினர்


