தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “இதுபோல் அதன் எதிர்புறமும் ஒரு உயர்மின் விளக்கு ஒன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பாலகுருசாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், வைதேகி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


