77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பாக இரத்ததான முகாம் மாவட்ட பொருளாளர் சகோ.ரஷீத் காமில் மற்றும் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.தமீம் அன்சாரி தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கேம்பிரிட்ஜ் பள்ளி வளாகத்தில் (13/08/2023) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது
இம்முகாமில், சிறப்பு விருந்தினராக திருவைகுண்டம் காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் அவர்கள் கலந்து கொண்டார்கள். மனித உயிர் காக்கும் இம்மனித நேயச் சேவையில். பொதுமக்கள் கலந்து கொண்டனர், 30 நபர்கள் தங்கள் இரத்தங்களை தானம் செய்தனர். இரத்த தானம் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயக்குறிச்சி கிளையின் இச்சமூக சேவையை பாராட்டி தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.


