தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளை பரும்பு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான பேரூர் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் சிவகளை பரும்பு பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் முருகன் (56) என்பவரது மாடுகள் நேற்று (13.07.2022) மேய்ந்து சேதப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வெங்கடேஷ் மற்றும் முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் முருகனிடம் தகராறு செய்து சாதி பெயரை கூறி அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


