குயிலி (பிறப்பு: சூன் 14, 1961) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் பூ விலங்கு என்னும் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். நாயகன் படத்தில் வரும் ‘நிலா அது வானத்து’ மேலே என்ற பாடலுக்கு நடனம் ஆடி புகழ்பெற்றார். விஜய் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியில் அம்மா வேடத்தில் நடித்தார்.


