11. காயாமொழி – தியாகி எஸ்.டி. ஆதித்தன்.
ஆங்கிலேய எடுபிடி அதிகாரி லோன் துரையை கொன்ற தமிழக தியாகிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப் போராடி, 60 நாள் தொடர்ந்து கசை அடி பெற்று அதன் பின் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆகி தமிழக தியாகிகளின் தண்டனைகளை ரத்து செய்த தியாக வீர வரலாறையாவது அறிவீர்களா ??…
இந்தியா சுதந்திரத்தை நெருங்கிய 1942-ஆம் ஆண்டு. வெள்ளையனே வெளியேறு என்றும் செய் அல்லது செத்துமடி என்றும், காந்திஜி அப்போது போராட்டங்களை அறிவித்தார்.
உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு வகையான எதிர்ப்பு கிளர்ச்சிகள் வலுத்தன. இந்த தருணத்தில் நாடு முழுவதும் 1 லட்சம் பேர் சுதந்திர போராட்டத்துக்காக சிறைக்கு சென்றனர்.
அந்த சமயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 இளைஞர்கள் ஒன்று திரண்டு கடற்கரை உப்பளத்தை நள்ளிரவில் முற்றுகை இட்டனர்.
அப்போது அவர்களை தாக்கவும், கொல்லவும் முயன்ற பிரிட்டிஷ் போலீசாரை பிடித்து கட்டிப் போட்டனர். அவர்களிடம் இருந்த 16 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். திரும்பும் வழியில் பங்களா இருந்தது.
ஆஷ் துரையை போலவே கடும் ஆதிக்கம் செய்து வந்த லோன் துரை என்ற ஆங்கிலேய அதிகாரி அங்கு இருந்தான். விடுதலை இயக்க வீரர்களின் சத்தம் கேட்டு லோன் துரை வெளியில் வந்தார். நடப்பதை புரிந்து கொண்ட லோன் துரை பங்களாவில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து, சுட முயன்றார்.
லோன் துரையின் துப்பாக்கி விசை இயங்கும் முன்பு துள்ளி வந்த வேல் ஆவேசமாக லோன் துரையின் கழுத்தை சீவி அறுத்து வீழ்த்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ந்த ஆங்கிலேயே அதிகாரிகள் “குலசேகரப்பட்டினம் சதி வழக்கு” என்ற வழக்கை போட்டனர். நெல்லையில் சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது.
விடுதலை வேட்கைக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தவித்த இளைஞர்களை காப்பற்ற வழக்குரைஞர்கள் எவருமே முன் வரவில்லை. காரணம் பிரிட்டிஷ் அதிகாரியான லோன் துரையையே இவர்கள் கொலை செய்து விட்டார்களே!!. நாம் ஆஜர் ஆனால் நமக்கு பிரச்சனைகள் வந்து விடுமே என தவிர்த்தனர்.
அநாதையாக தவித்த சுதந்திர போராட்ட இளைஞர்களுக்கு ஆபத்பாந்தவனாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்து சிங்கமாக ஒருவர் வந்து ஆஜர் ஆகிறார்.
அந்த வீர சிங்கம்தான் தியாகி எஸ்.டி.ஆதித்தனார். சிவில் வழக்குகளை மட்டுமே எடுக்கும் அவர் முதலும் கடைசியுமாக எடுத்த ஒரே கிரிமினல் வழக்கு இது தான்.
நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் இந்த வழக்கை விசாரித்து தண்டனைகளை அறிவித்தார்.
காசிராஜன், ராஜகோபாலுக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் அறிவித்தார். ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனை, இருவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பு வழங்கினார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை பெற்றவர்கள் தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி கொக்கிரக்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். தூக்கு தண்டனை பெற்றவர்களை பார்க்க தியாகி எஸ்.டி.ஆதித்தனார் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வருகிறார்.
மீண்டும் டெல்லி சென்று காந்தி ஜியிடம் விவரத்தை சொல்லி தானே லண்டன் பிரிவு கவுன்சில் நீதி மன்றத்தில் விடுதலை பெற வாதாடுகிறார் 14 மொழிகளில் பேசி 7 மொழிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த இந்திய சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர் தியாகி எஸ்.டி.ஆதித்தனார்.
காந்தி ஜியை ஏற்கனவே அம்மன்புரம், திருச்செந்தூருக்கு அழைத்து வந்தவரும் இவர்தான்.
லண்டன் பிரிவு கவுன்சில் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திலுமே அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அனைவரும் பெரும்பாலும் 20 வயதை சேர்ந்தவர்கள்.
விடுதலை செய்ய இயலாத நிலையில் தொடர்ந்து தளர்வின்றி போராட்ட களத்தில் மக்களோடு மக்களாய் போராடுகிறார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார்.
பிரிட்டீஷ் அதிகாரியை கொன்றவர்களுக்காக இப்படி இவர் போராடுகிறாரே என்ற கோபத்தில் தியாகி எஸ்.டி.ஆதித்தனார் அவர்கள் ஆங்கிலேய அரசால் திடீரென கைது செய்யப்படுகிறார்.60 நாள் கசை அடி பெற்று சிறைச்சாலையில் வாடுகிறார். வெளியே வந்தும் தளராமல் வழக்கை நடத்துகிறார்.
எஸ்.டி.ஆதித்தனாரின் தீவிர ஆதரவாளர்களான வழக்குரைஞர் ஆறுமுகநேரி மேல வீடு சிவசுப்ரமணிய நாடார் மற்றும் சில வழக்குரைஞர்கள் தொடர்ந்து தயங்காது வழக்கை நடத்துகின்றனர்.
இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் வேவல் என்பவர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். அதன் பின் நாடு சுதந்திரம் அடைந்தது.
சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் நிர்ணய சபையின் முதல் உறுப்பினராக போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை மாநிலத்தில் டி.பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் இடைக்கால மந்திரி சபை அமைத்தது.
அதன் பின்னர் மாவீரர்களை விடுதலை செய்ய வைக்கிறார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார்.
சுதந்திரத்திற்கு முன்பாகவே அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக எளிதாக ஆனதால் விடுதலையும் எதிர்பார்த்த படியே கிடைத்தது.
இந்த வழக்குக்கு பிறகு ராஜகோபாலன் Ôதூக்குமேடை ராஜகோபாலன்Õ என்ற பெயரில் தமிழகத்தில் அழைக்கப்பட்டார்.
இதே தருணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் கைப்பற்றப்பட்டதாகும்.
இந்த காவல் நிலையத்தில் இருவர், இரவில் பாரா காவலர்களாக இருப்பர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு பாடையை கட்டி அதில் ஒருவரை பிணம் போல் கிடத்தினர். போலீஸ் ஸ்டேஷன் வழியே இரவில் சவ ஊர்வலம் நடத்தினர். ஒருவர் சங்கு ஊத, இன்னொருவார் சேகண்டி தட்ட, மற்றொருவர் கொள்ளிச்சட்டி ஏந்தி ஊர்வலம் நடந்தது. வெளிச்சத்தில் ஆட்டம் பாட்டத்தை பார்க்க துப்பாக்கியை சாய்த்து வைத்து விட்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர்.
நாட்டையே ஆண்ட மகாராஜா செத்து போனாரே என ஒருவர் ஒப்பாரியாக சொன்னார். “என்னப்பா சொல்ற, விளங்குமாறு சொல்லு” என்று ஒரு போலீஸ்காரர் கேட்டார். “அதுதான்யா இது பிரிட்டிஷ் மகாராஜா” என்று கூறி போராளிகள் இரு போலீஸ்காரர்களையும் இழுத்து போய் போலீஸ் லாக்கப்பில் வைத்து பூட்டினர். அதுவரை பாடையில் ஈ மொய்த்து பிணமாக கிடந்தவர் எழுந்து “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று ஆனந்த கொண்டாட்டம் போட்டார். காவல் நிலையத்திலிருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு போராளிகள் புறப்பட்டனர்.
மாவட்ட தலைநகர் நெல்லைக்கு செய்தி உடனே எட்டாத அளவிற்கு தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன. இது நம் இந்திய விடுதலை போராளிகளின் முன் ஏற்பாடு ஆகும்.
எனினும் சில நாட்கள் கழித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஹெச்மாடி மலபார் போலீஸ் படையோடு வந்து காவல் நிலையத்தை மீட்டார்.
குரும்பூரில் ரெயில் நிலையம், மெஞ்ஞானபுரம் தபால் நிலையம் என தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்ட போராளிகளால் கைப்பற்றப்பட்டது.
இதற்கு எதிராக போலீஸ்காரர்கள் கிராமம், கிராமமாக சென்றனர். மக்களை மிருகங்களாக வேட்டையாடினர். நக கணுக்கின் இடையில் ஊசியால் குத்தினர். தலையில் ரோமத்தை பிடுங்கினர். சித்ரவதை செய்தனர். அப்பாவி மக்களை கொடுமைப் படுத்தினர்.
விடுதலை போராட்ட போராளிகள் ஆறுமுகநேரி த.தங்கவேல் நாடார்
முன்னணியில் தேரிக்காடு சுனையில் திரண்டனர். பிரிட்டீஷ் போலீஸ் கொடுமைக்கு முடிவு கட்ட நேதாஜி பாணி ஜப்பானியர் போல் நாம் தற்கொலை படை அமைக்க வேண்டும் என்றனர். அதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார். அதில் சேர விரும்புவோர் ரத்த கையெழுத்து இடுங்கள் என வெள்ளை தாளை நீட்டினார்கள்.
கே,டி.கோசல்ராம், கடையனோடை ஜி.மகாராஜன், தியாகி சுப்பையர், அமலிபுரம் பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், பரமன் குறிச்சி நாகமணி வாத்தியார், கொழுவைநல்லூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கை விரலில் ஊசி குத்தி ரத்த கையெழுத்து இட்டனர்.
கானம் வெள்ளை கண்ணு, மேலாம்பூர் வீரபாகு, வள்ளிவிளை துரைராஜீ உள்ளிட்டோர் அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்வதாக வாக்களித்தனர்.
18 வயதான மங்களா பொன்னம்பலம் என்பவர் போலீஸ், ராணுவ படைகளுக்கு உள்ளே நுழைந்து போராளிகளின் உளவாளியாக தகவல் சேகரிக்க பணிக்கப்பட்டார். அவர் பணி அற்புதமாக அமைந்தது. நெல்லை மாவட்ட சுதந்திர போராளிகளின் பணி ஒரு பெரிய நாட்டின் ராணுவ சேனையின் கட்டுக்கோப்போடு திகழ்ந்தது.
இந்த போராட்டத்திற்கெல்லாம் ஆதரவாக இருந்தார் எஸ்.டி. ஆதித்தனார்.
1952 ஆம் ஆண்டு திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் இரட்டை மெம்பர் தொகுதியான திருச்செந்தூர் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்கிறார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார்.
ஆங்கிலேயன் லோன் துரையை வேல் கம்புக்கு இரையாக்கி மா வீரர்களை காத்த தியாகி எஸ்.டி.ஆதித்தனார் அவர்கள் காங்கிரஸை விட 4000 வாக்கு வித்தியாசத்தில் “குடிசை” பெட்டி சின்னத்தில் வெற்றி பெற்று ஏழை மக்களுக்காக பணியாற்றினார்கள்.
தியாக வீரர்களுக்கு தாமிர பட்டயம் வழங்கப்பட்டது. என் தியாகத்தை கொச்சைப் படுத்தவா இந்த பட்டயம் எனக்கு என வாங்க மறுத்து விட்டார் எஸ்.டி.ஆதித்தனார்.


