தமிழர் நாகரிகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது பொருதை ஆற்றின் கரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமே உலகிற்கு பறைசாற்றப்பட்டது. அத்த பெருமை வாய்ந்த தமிழ்நாட்டின் ஆறுகள் பற்றிய பிரமாண்டமான சிறப்பு நிகழ்ச்சி “நதியே நதியே” என்ற தலைப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் ஹலோ FM il ஒலிபரப்பாகிறது.
சர்வதேச ஆறுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி இன்று தமிழ் நாட்டின் முக்கிய ஆறுகள் பற்றிய வரலாற்று தகவல்கள், சுவராஸ்யமான புனைவுகள், இலக்கியங்களில் ஆறுகள், தமிழ்த் திரைப்படங்களில் ஆறுகள் என்று பல்வேறு கோணங்களில் ஆறுகள் பற்றி காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ஒலிபரப்பப்பட உள்ளது. தாமிரபரணி,வைகை, காவிரி, சிறுவாணி கூவம், பெருஞ்சாணி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகள் பற்றியும், அவற்றின் தொன்மையையும் அதை பாதுகாக்க வேண்டியதையும் பற்றிய பிரத்தியேக நிகழ்ச்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆறுகள் பற்றி வரலாற்று ஆர்வலர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சூழலியல் ஆர்வலர் தமிழ்தாசன், கோவை மற்றும் அதனை சுற்றி யுள்ள ஆறுகள் பற்றி பத்திரிகையாளர் கா.சு.வேலாயதன், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆறுகள் பற்றி பேராசிரியர் கி.சுதீஷ் குமார், வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆறுகள் பற்றி சூழலி ஆர்வலர் ஆற்றல் பிரவின்குமார், சென்னையில் உள்ள ஆறுகள் ஆய்வாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேக்கின்றனர். தமிழர் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் ஆறு களின் நீண்ட நெடிய வரலாறு பற்றி வானொலி வரலாற்றில் முதன் முறையாக இத்தகையதொரு பிரமாண்ட நிகழ்ச்சியை ஹலோ எம் இல் ஒலிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


