தூத்துக்குடி மாநகராட்சி மண்டலங்களில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களை மேய் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்பொழுது அங்கு பணியில் இருந்த அலுவலர்களும் பணியாளர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றினை வரும் நாட்களில் நிறைவேற்றி தருகிறேன் என்று கூறியுள்ளேன் என்றார். திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


