தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா சிறப்பாக நடந்தது.
இதற்காக அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அய்யனார்குளம்பட்டி சங்கரபாண்டியன் மற்றும் செய்துங்கநல்லூர் தலையாரி சோமசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.


