ஆழ்வார் திருநகரியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமிற்கு, ஆழ்வார்திருநகரி கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரியார், தன்னார்வ தொண்டர் முத்துராஜ், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன், பகுதி பொறுப்பாளர் முருகசெல்விஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
முகாமினை, ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவர் சுனில்குமார் தொடங்கி வைத்தார். முகாமில், கண் மருத்துவர் செலின் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்றவர்களில் 16 பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், பகுதி பொறுப்பாளர் லிஜியா, தன்னார்வ தொண்டர்கள் செல்வன்துரை, விஜய்குமார், மையத்தலைவர்கள் லெட்சுமி, ஷிபானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


