நிதி ஒதுக்கியும் பணி செய்யாத நெடுஞ்சாலை துறை.*
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள மகிளம்புரம் அருகில் உள்ள தரைமட்ட பாலம் தற்போதைய கன மழையில் சேதமடைந்து உள்ளது.. மேலும் பாலத்தின் மேல் மூன்று அடி உயரத்தில் வெள்ளம் வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தளவாய்புரம், மகிளம்புரம், புதூர் உமரிக்கோட்டை, கல்லன்பரும்பு பேரூரணி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தாய் கிராமமாக செக்காரக்குடி இருந்து வருகிறது. மருத்துவம், உணவு, பால் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் செக்காரக்குடியை நம்பியே மேற்படி ஐந்து கிராம மக்கள் இருப்பதால் இந்த பாலம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாலமாக உள்ளது. இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றிட ஶ்ரீ வைகுண்டம் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.2 கோடி மதிப்பில் டென்டர் விடப்பட்டும் இன்னும் பணிகள் துவங்காததால் பொது மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த மழைக்கு பிறகாவது உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து துவங்க நெடுஞ்சாலை துறை முன்வருமா? என் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


