தூத்துக்குடியில் வருகிற 16ஆம் தேதி திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் வருகிற 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் வைத்து மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க்கழகச் செயலாளர்கள், இளைஞரணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் 26.11.2023 அன்று கழக தலைவர் தளபதியார் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், டிசம்பர் 24ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


