நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் 98ஆவது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளரும், சென்னை கிரேஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுதாகர் தலைமை வகித்தார். தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்பஜெபம் செய்தார். இயற்பியல் ஆசிரியர் ஹெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்றார். பள்ளி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். தலைமை ஆசிரியர் குணசீலராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். இப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் ரத்தினகுமார், தாமஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் அரசு பொதுத்தேர்வில் 10, II மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை பள்ள தாளாளர் சுதாகர் வழங்கினார். மேலும் அனைத்து வகுப்பிலும் கல்வியில் சிறப் பிடம் பெற்ற மாணவர் களுக்கும், தனித்தனியாக பாடங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ் களும் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீ தம் தேர்ச்சி பெற காரணமான ஆசிரியர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ஆசிரியை ஐடா தொகுத்து வழங்கினார்..
இவ் விழாவில் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவி யம், புனித லூக்கா சமுதாய கல்லூரி தாளாளர் செல்வின், பழைய மாண வர் சங்க தலைவர் ரூபன் துரை சிங், செயலாளர் ஜட்சன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஞானையா, ஓய்வு பெற்ற ஆசிரியர் எட்வின், தூய யோவான் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா மற்றும் ஆசிரியர்கள், அலுவ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை சாரா ஞானபாய் நன்றி கூறினார்.


