கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் ஒன் கேடட் ஒன் ட்ரீ என்ற அடிப்படையில் 100 என்சிசி மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருநெல்வேலி 3ம் பட்டாலியன் பிரிவை சேர்ந்த கமாண்டர் லெப்டினென்ட் கர்னல். தீபக் சிங் சமந்த் தலைமை வகித்தார். ரிசல்தார் மேஜர் ஹானரரி லெப்டினெட் கணேசன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் நாயக். தளபதி ஆதிரா சந்தோஷ், என்சிசி பொறுப்பாசிரியர் பத்மா உள்ள என்சிசி பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்


