தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரை திரும்பின. இதன் காரணமாக மீன்பிடி துறைமுக மீன்கள் விற்பனை செய்யும் ஏல கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்ட நிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தற்போது 40 நாட்கள் 21 நாட்கள் என மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளதால் மீன்களின் விலை குறையத் துவங்கியுள்ளது. மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டதால் அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்


