1923 – எசுப்பானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
1949 – இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐசுலாந்து, யோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
1953 – நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956 – ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை முதல் தடவையாக அறிமுகப்படுத்தியது.[1]
1968 – பனிப்போர்: அல்பேனியா வார்சா ஒப்பந்த அமைப்பில் இருந்து விலகியது.
1971 – மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
1971 – நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – பிரேசில் மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட கதிரியக்கப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியால் உயிரிழந்தனர்.
1989 – டெசுமான்ட் டுட்டுவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார்.
2001 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவில் விமான சேவைகள் ஆரம்பமாயின.
2007 – பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2008 – தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
2013 – தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானித்தான் எராட் நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது தாக்குதலை நடத்தியதில், இரண்டு காவல்துரையினர் கொல்லப்பட்டனர்.
2018 – மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.


