தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் 193 பேருக்கு ரூ.94,91,970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி., வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் பன்னீர்குளம், தெற்கு மயிலோடை, திருமலாபுரம் மற்றும் கழுகாசலபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் குறைகேட்டல் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மொத்தம் 193 பேருக்கு ரூ.94,91,970 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இதன்படி சமூக பாதுகாப்பு திட்ட உதவித் தொகைகள், சிறு குறு விவசாயிகள் சான்று, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், கூட்டுறவுத்துறை மூலம் பயிர் கடன்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளிகளுக்கு பயனாளர் அடையாள அட்டைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விதைகள் மற்றும் இடுபொருள் மானியங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கயத்தார் பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரியா, கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், ஊராட்சி மன்றத்தலைவர்கள் பேச்சியம்மாள் (பன்னீர்குளம்), ஸ்ரீவள்ளி (தெற்கு மயிலோடை), ராஜேஷ்வரி (திருமலாபுரம்), விஜயகுமார் (கழுகாசலபுரம்), பன்னீர்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுச்சாமிபாண்டியன், கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


