கோவில்பட்டியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கும் வகையில், காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (12.08.2024) காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்கின்ற நிகழ்வினை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காணொலிக் காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலெட்சுமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள்.


