தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இன்று காவல்துறையினருடன் இணைந்து நடை ரோந்து மேற்கொண்டார்.
ரோந்து பணியின் போது அப்பகுதி பொதுமக்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாகக் கேட்டறிந்தார். சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அது குறித்துப் பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பாதுகாப்பை பலப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புப் பணிகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நடை ரோந்து ஆய்வின் போது சிப்காட் காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள் உடனிருந்தனர்.


