வேம்பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினர் பொதுஇடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி புகையிலை தடுப்பு ஆலோசகர் வேனுகா முன்னிலையில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் கோவில்பட்டி நேர்முக உதவியாளர் சோ. பெரியசாமி தலைமையில் வேம்பாரில் கடைகள் மற்றும் பொது இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொதுஇடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை செய்யக்கூடாது. என வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் காலாவதி தேதி சரிபார்க்கப்பட்டு ஆலோசணை வழங்கப்பட்டது.இதில் விளாத்திகுளம் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து புகையிலை தடுப்பு ஆலோசகர் வேணுகா மற்றும் கோவில்பட்டி சுகாதார பணிகள் இயக்குநரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி ஆகியோர் கூறுகையில் “வேம்பார் பகுதியில் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறைபாடு உள்ள சிலருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இனியும் தொடர்ந்து திடீர் ஆய்வுகள் நடக்கும். விதிமீறல் இருந்தால் உணவுப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிந்தால் குறிப்பிட்ட சட்டவிதிகளின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


