செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் ரமலானை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
செய்துங்கநல்லூர் அல்மஸ்ஜித்நூர் பழைய பள்ளிவாசலில் ஜமாத் சார்பாக வருடம் தோறும் ரமலானை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்படும்.
அதே போல் இன்று செய்துங்கநல்லூர் அல்மஸ்ஜித்நூர் பழைய பள்ளிவாசல் ஜமாத் சார்பாக பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் சாதிக், செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் கரீம் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு கஞ்சி விநியோகம் செய்தனர். மீரான், அப்துல் கனி, வாசிம், செய்யத் இப்ராஹிம், நவ்ஃபல், ஆபித், ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.


