செய்துங்கநல்லூர் அருகில் உள்ள அய்யனார்குளம் பட்டி வண்டிமலையான் சுவாமி, வண்டிமலைச்சி அம்மன், முப்பிடாதி அம்மன் கோயில் கும்பாபிசேகம் வருகிற 15 ந்தேதி நடைபெறவுள்ளது. இதையோட்டி 13 ந்தேதி காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை உள்பட பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகா லெட்சுமி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை , கோபூஜை நடந்தது. அதன் பின் மாலை 4.30மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்சி நடந்தது. யானை மீது புனித நீர் எடுத்து செய்துங்கநல்லூரை சுற்றி வந்து சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில வழியாக அய்யனார்குளம் பட்டிக்கு புனிதநீர் ஊர்வலமாக வந்து சேர்ந்தது. தொடர்ந்த கடஸ்தாபன் இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
இரண்டாம் நாள் இரண்டாம் யாக சாலை பூஜையும் இரவு 7 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்று இரவு 12 மணிக்கு மருந்து சாத்தப்படும்.
வருகிற 15 ந்தேதி காலை 6 மணி முதல் புஜை நடைபெற்ற 9 மணிக்கு யாத்ரா தானம், கோபூஜையுடன் கடம் புறப்பாடு நடைபெறும். அதன் பின் காலை 09 மணிக்கு மேல் விமான கோபுர அபிசேகம் மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிசேகம் நடைபெறும். தொடர்ந்து 1 மணி முதல் அன்னதானம் நடைபெறும் இரவு 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெறும். இதற்கான எற்பாடுகளை அய்யனார்குளம் பட்டி கும்பாபிசேக விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.


