நாசரேத் திருமறையூரில் உள்ள கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி விழா நடைபெற்றது.
நாசரேத் பரி. யோவான் பேராலய வாலிப பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் சார்பில் திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் நடைபெற்ற மனமகிழ்ச்சி விழாவிற்கு பேராலய உதவி குருவானவர் தனசேகர் ராஜா தலைமை தாங்கினார். கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளித் தாளாளர் டேவிட் சாலமோன் அனைவரையும் வரவேற்றார்.
நாசரேத் பரி. யோவான் பேராலய வாலிப பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். நிறைவாக பள்ளி முதல்வர் மெற்றில்டா ஜெசி நன்றி கூறினார்.


