செய்துங்கநல்லூரில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவனாலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலயமாகும் . இந்த ஆலயத்தில் திருவாசகம் முற்றோறுதல் நடந்தது. திருவாசக சித்தர், கயிலைப் புனிதர், திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் ஐயா தலைமையில் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதுதல் நடத்தினர். இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிவன்,அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது . சிவதாமோதரன் அய்யாவை செய்துங்கநல்லூரில் பஜாரில் இருந்து சிவனடியார்கள் ஊர் வலமாக அழைத்து வந்தனர். நால்வர் வேடமணிந்து பகத்ர்கள் வந்தது பக்தர்கள் கவனத்தினையும் ஈர்த்தது.கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலய ஆன்மிக பேரரவை மற்றும் பொதுமக்களும் சிவனடியார் திருக்கூடமும்
செய்திருந்தது.


