சாத்தான்குளம் ஒன்றியத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 118 பேர்களுக்கு பணி நியமன ஆணையை ஒன்றியக்குழு தலைவி ஜெயபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு திட்ட இயக்குநர் வீரபத்திரன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அருண் பிரசாத், புத்தாக்க திட்ட உதவி அலுவலர் சேவியர், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், வழக்கறிஞர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட வட்டார மேலாளர் ரோஸ்லீன் வரவேற்றார். இதில் 23க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்தின.
200க்கு மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவி ஜெயபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 118 பேர்களுக்க பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், பாலசுப்பிரமணியன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் குமாரி, ஜெபா, பொன்ராணி, மகேஸ்வரி, அம்பிகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய வளபயிற்றுநர் ரோஸ்லீன் கலாவதி நன்றி கூறினார்.


