தூத்துக்குடி மாவட்ட மாதிரி தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பசுமை முதன்மையாளர் விருது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் வழங்கினார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்காக 100 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்க பசுமை முதன்மையாளர் விருதுக்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில் பாராட்டு சான்றிதழுடன் 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து இந்த விருதுகள் தனிநபர்கள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான விருது இரண்டு தனி நபர்கள் மற்றும் பள்ளி ஒன்றுக்கு வழங்கப்பட்டது. இதில் மாதிரி தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வனஉயிர் பாதுகாவலர் ராமேஸ்வரன், வேடநத்தம் அரசு பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வழங்கினார். அவருடன் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் கலைவாணி, உதவி பொறியாளர் பிரதீப் பாண்டியன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முத்தாலங்குறிச்சி காமராசுவை கிராம உதயம் ஆழ்வார் தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன், கவிஞர் மணிமொழிச்செல்வன், ஆழ்வார்தோப்பு ஊர் மக்கள் உள்பட பாராட்டினர்.


