தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் , கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி அவர்களின் ஆலோசனைப்படி கருங்குளம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வல்லநாடு ஊராட்சியில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர்
இதில் தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கருப்பசாமி , வல்லநாடு ஊராட்சியில் உள்ள பள்ளிகள் திருமண மண்டபங்கள் அங்கன்வாடிகளில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் டெங்கு காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், கொசு ஒழிப்பிற்கு புகை மருந்து அடிக்க வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
இந்த தடுப்பு நடவடிக்கையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், சண்முகபெருமாள், பாலக்கண்ணன், ஷாகீர், நித்திஷ் ,பிரசாத் ,ஆஸ்லின், செல்வராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.


