கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தின மாரத்தான் போட்டி நடந்தது.
வருடந்தோறும் ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு துவங்கி மெயின் ரோடு வழியாக எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி,கோவில்பட்டி ஜீவி என் கல்லூரி, உண்ணாமலைக் கல்லூரி, எஸ்எஸ்டிஎம் கல்லூரி, நாடார் மேல்நிலைப் பள்ளி, ஹரிதா பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பள்ளி கல்லூரிகளிலிருந்தும், பொதுமக்களும் 350 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல் ஆறு இடங்களுக்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக சான்றிதழும் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவில்பட்டி பயணியர் விடுதியில் துவங்கிய மாரத்தான் போட்டிக்கு எஸ் எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.கல்லூரி உறுப்பினர் சரவணகுமார்,முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ் எஸ் டி எம் கல்லூரி உடற்கல்வியியல் துறை இயக்குனர் செல்லதுரை வரவேற்றார்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் மாரத்தான் போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவன் பவித்ரன், பெண்கள் பிரிவில் கோவில்பட்டி ஹரிதா பப்ளிக் பள்ளி மாணவி முத்தரசி,ஆகியோர் முதல் பரிசு ரூபாய் மூவாயிரமும்,சான்றிதழும் பெற்றனர். இதில் கல்லூரி பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி உடற்கல்விவியல் துறை பேராசிரியர் சிவா நன்றி கூறினார்.


