வல்லநாடு கோசாலைக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலையை கோசாலை நிர்வாகி நாரயணன் தலைமையில் வரவேற்றனர். அதன் பின் அவரிடம் பலரும் மனு கொடுத்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவரை சந்தித்து தான் எழுதிய “நவீன தாமிரபரணி மகாத்மியம்” நூலை பரிசாக கொடுத்தார். அவரை அண்ணாமலை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அவர் தாமிரபரணியை சுத்தப்படுத்தி முள்செடிகளை அகற்றி, சாக்கடை கலக்காத நதியாக மாற்றவேண்டும். மண்டபம் படித்துறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க பிரதமர் மோடி மூலமாக உடனடியாக அடிக்கல் நாட்ட வேண்டும்.
செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் நிற்காமல் செல்லும் பாலக்காடு- செந்தூர் எக்ஸ் பிரஸை நிறுத்திட மதுரை தென்னக ரயில்வே நிர்வாகம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கை மனுவை கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அண்ணாமலை ,இந்த மூன்று மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும். மேலும் இது குறித்து எழுத்தாளரிடம் போனில் தொடர்ப்பு கொண்டு பேசுவேன் என்றும் கூறினார். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபு, ஒன்றிய தலைவர் சே. நல்லமுத்து, பசுமை தமிழ் தலைமுறை சுகன் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


