பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தெய்வசெயல் புரம் கட்சி அலுவலகத்தில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 160 வது பிறந்தநாள் முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் போது மாவட்டச் செயலாளர் வக்கீல் R.பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து ஆகியோர் தலைமையிலும் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் M.அரிராமன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் A.சிலம்பரசன், ஒன்றிய பொருளாளர் P.பால்துரை, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் விவசாயி மாவட்ட செயலாளர் P.பேச்சி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் P.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.முத்து, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் P.ராமலிங்கம், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் V.செல்வம், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் A.வசந்த், தொழில் பிரிவு ஒன்றிய செயலாளர் A.பாலமுருகன், அமைப்பு சாரா பிரிவு ஒன்றிய செயலாளர் R.ராஜ், ஐடி பிரிவு ஒன்றிய செயலாளர் M.சுனில், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் R.பிரவின், ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் P.விநாயகப் பெருமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்


