முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் கடந்த 17.06.2025 அன்று ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் சின்னத்துரை (34) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


