கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2025) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.226.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி , கயத்தார் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை , கயத்தார் வட்டாட்சியர் சுந்தர்ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


