பத்து வருடங்களுக்கு முன்பு கால்வாய் கிராமத்திற்கு இரவு நேரத்தில் வரவேண்டும் என்றால் மிகவும் சிரமமான ஒன்று அந்த அளவுக்கு சாலைகளின் அவலமான நிலையும் இருபுறமும் முட்புதர்களின் ஆக்கிரமிப்பும் இருக்கும் ஆனால் தற்போது அந்த நிலைமாறி விட்டது …
அதிலும் குறிப்பாக உலக தரத்தில் அமைய உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு மையமும் ஆராய்ச்சி நிலையமும் எங்கள் ஊரின் முகப்பு பகுதியான கால்வாய் விலக்கு (ஆதிச்சநல்லூர்)பகுதியில் அமைவதால் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.
தற்போது சுற்றுலா வாசிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுற்றுலா வாசிகளின் கவனத்திற்காக நெல்லை _-திருச்செந்தூர் பிரதான நெடுஞ்சாலையில் இரவு நேரத்திலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி சம்பந்தமான தகவல் பலகைக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன …
வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட இருக்கிறது ஆதிச்சநல்லூர் கால்வாய் கிராம பகுதிகள்
இதனை அடையாளப்படுத்திய இந்திய தொல்லியல் துறைக்கு மிக்க நன்றி


