செய்துங்கநல்லூரில் கிறிஸ்மஸ் தாத்தா வீடு வீடாக வந்து பரிசளித்தார். சிறுவர்களிடம் பாட்டு பாடி மகிழ்வித்தார். செய்துங்கநல்லூர் அருகில் உள்ள தெற்கு வெட்டியபந்தி பெராக்கா நகர் தேவமகிமை சபை சார்பில் கிறிஸ்மஸ் தாத்தா வீதி உலா வந்தார். இவர் செய்துங்கநல்லூர் , அய்யனார்குளம் பட்டி, கருங்குளம் உள்பட பல கிராமங்களுக்கு சென்று வீடுவீடாக மக்களுக்கு பரிசளித்தார். பல்வேறு பரிசு பொருள்கள் மற்றும் சாக்லெட்களை சிறுவர்களுக்கு கொடுத்து ஆடிபாடி மகிழ்வித்தார். கிறிஸ்மஸ் தாத்தாவை மக்கள் ஆர்வத்தோடு வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தேவ மகிமை சபை பாஸ்டர் இம்மானுவேல் மற்றும் சபை மக்கள் செய்து இருந்தனர்.


