செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் என்னும் எழுத்தும் பருவம் இரண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக முழுவதும் ஒன்றிய அளவில் கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதியான இன்று வரை மூன்று நாட்கள் என்னும் எழுத்தும் பயிற்சி பருவம் இரண்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 187 ஆசிரியர்களுக்கு இன்று மூன்றாவது நாளாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் என்னும் எழுத்தும் பருவம் இரண்டுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோல்டா கிரேசி ராஜாத்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சந்திரா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.


