சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பு அமைப்பான ஆன்மா தொண்டு அமைப்பின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பு அமைப்பான ஆன்மா தொண்டு அமைப்பின் சார்பில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் சீருடை, நோட்டுப் புத்தகங்கள், மேசை, நாற்காலி நீர் சுத்திகரிப்பான், பேருக்கு மருத்துவ உதவி தொகை, மூன்று நபர்களுக்கு, கல்வி உதவித்தொகை 15 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர், ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆன்மா அமைப்பினர் கலந்து கொண்டார்.


