கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை,எஸ்எஸ்டிஎம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கல்லூரி கூட்டரங்கில் உலக பார்வை தின விழா நடந்தது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் 2வது வியாழக்கிழமை இந்த வருடத்தின் 12ம் தேதி பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் ஜோசப், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை பிரின்ஸி ஜெனிட்டா அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட மேனாள் துணை ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் உலக பார்வை தின விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து பேசினார்.அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஹரிணி கிருஷ்ணா கண்பார்வையின்மை, குறைபாடு, கண்தானம் குறித்து ஒளி ஒலி காட்சி மூலம் விளக்கி பேசினார்.இதில் சமூக ஆர்வலர் முத்து முருகன், நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் ஜெய்சிங் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் காய்த்ரி நன்றி கூறினார்.


