1899 – தென்னாபிரிக்காவின் போவர் குடியரசு இங்கிலாந்து மீது போரை அறிவித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் ஜேர்மனியர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1918 – மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்மனியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர்.
1964 – சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.
1968 – எக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – மறைந்த மா சே துங்கின் இடத்திற்கு ஹுவா குவோஃபெங்க் என்பவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிப்பதாக மக்கள் சீனக் குடியரசு அறிவித்தது.
1984 – ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பில் இருந்து மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார்.
1986 – மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
1993 – இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
1994 – மகெலன் விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
1999 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்சியில் பெர்வேஸ் முஷாரஃப் நவாஸ் ஷெரீப்பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.
1999 – உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.
2001 – அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
2003 – பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
2005 – சீனாவின் இரண்டாவது ஆட்களுடன் கூடிய விண்கலம் சென்ஷோ 6 இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.


