செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரரவை தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக செய்துங்கநல்லூர் பஜாரில் த.வெள்ளையன் புகைப்படம் வைத்து அவருக்கு மலர் தூவி வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஐயப்பன், இணைத்தலைவர் செல்வ விநாயகம், துணை தலைவர் குரு. மாரியப்ன், செயலாளர் கனகராஜ் பூபாலராயன், இணை செயலாளர் அருண் ஆறுமுகம், துணை செயலாளர் கணபதி முருகன், கௌரவத் தலைவர்கள் அய்யாக்குட்டி, சுடலைமணி, பால்சாமி, நிர்வாகிகள் தளவாய் செல்வன், வேம்புதுரை, கணேசன், சாதிக், இப்ராகீம், பிரபா பாண்டியன், சிவராமன், ரமேஷ், நயினார், பரமசிவன், சுடலைமுத்து, மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


