என்.எல்.சி. சார்பில்
தாமிரபரணிகரையோம் பனைமர விதைகள் நடும் பணியை தலைமை செயல் அதிகாரி அனந்த ராமானுஜம் தொடக்கி வைத்து பேசினார்
என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம்
தாமிரபரணி கரையோரம் பனைமர விதைகள் நடும் பணியை தலைமை செயல் அதிகாரி அனந்த ராமானுஜம் தொடக்கி வைத்தார் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தாமிரபரணி கரையோரங்களில் (பனை மரங்கள் இருந்த பகுதியை தவிர மற்ற இடங்களில்) பல உடைப்பு ஏற்பட்டது இதனால் தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதில் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின இதனால் கிராமங்களில் உயிர்சேதங்கள், பொருள் சேதங்கள் மற்றும் பல்வேறு சேதங்கள் பெருமளவில் ஏற்பட்டது. இதனை தடுக்க வேண்டுமென்றால் தாமிரபரணி கரையை வலுப்படுத்த வேண்டும். என்பதற்காக என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் ஏரல் அருகே உள்ள சேதுக்கு வாய்தான் ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கப்பழக்கரை கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி அருகே நீர் நிலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தாமிரபரணி கரையோரம் பனைமர விதைகள் நடும் பணி தொடங்கியது.
தொடக்க விழாவிற்கு என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி அனந்த ராமானுஜம் தலைமை தாங்கி தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் பனைமர விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார் .
என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தலைமை மேலாளர் கி. விஷ்ணுகுமார், துணைப் பொது மேலாளர் (மனித வளம) எஸ்.சரவணன், கூடுதல் தலைமை மேலாளர் கி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்பு குழு தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி வரவேற்றார்.
சேதுக்கு வாய்த்தான் ஊராட்சி மன்ற தலைவர் சுதா சீனிவாசன், வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில்
சேதுக்குவாய்தான் ஊராட்சி மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், வனத்துறை அலுவலர் (ஓய்வு) மகாராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார். என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி அனந்த ராமானுஜத்திற்க்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பனை ஓலை மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பனை ஓலையில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக் கரையோரம், சேதுக்கு வாய்த்தான் குளம், கடம்பாகுளம், கடம்பாகுளம் மறுகால் ஓடை, காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும் பனைமர விதைகள் விதைக்கப்பட உள்ளன


