விளாத்திகுளம் உட்பட பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ, ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார்.
ஆய்வில் காலை உணவின் தரம், குடிநீர் இருப்பு, குடிநீர் தொட்டிகள் இருந்தால் சுத்தம் செய்தல், சமையல் பாத்திரங்கள், அறை, சமையல் பொருட்களுக்கான சேமிப்பு இடம், சமையல் ஊழியர்களின் பொது சுகாதாரம், ஆசிரியர் வருகை, காலை உணவுக்கு 1-5 வகுப்பு குழந்தைகளின் 100சதவீத சேர்க்கை, தண்ணீர் இணைப்புடன் கூடிய கழிப்பறை வசதி, பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தல், பள்ளி கட்டிட நிலை, அதிக வகுப்பறைகள் தேவை, இடிக்க வேண்டிய எந்த தேய்மான கட்டிடம், வளாகத்தில் ஏதேனும் கட்டப்பட்டிருந்தால் புதிய கட்டிடத்தின் நிலை, மதிய உணவு ஊழியர்களின் வருகை, மதிய உணவு ஊழியர்களின் பொது சுகாதாரம், மதிய உணவைப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை,
முதல்வர் காலை உணவு மற்றும் மதிய உணவுக்கான தட்டுகள், டம்ளர்கள், முதல்வர் காலை உணவு மற்றும் மதிய உணவு சமையல் பொருட்களுக்கு தனி சேமிப்பு புள்ளிகள், மாணவர்களிடையே சாதி தொடர்பான ரிப்பன்கள் / கை கியர்கள் இருப்பது, இளம்பெண்களுக்கு இரும்பு//போலிக் அமில மாத்திரைகள் விநியோகம், பள்ளி நிர்வாகத்தால் மாணவர்களுக்கு சப்பல் / பள்ளி பைகள் விநியோகம், பள்ளி மேலாண்மைக் குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் கூட்டம், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் கோரும் பிற உள்கட்டமைப்புத் தேவைகள், பள்ளி/ஆசிரியர்கள்/மாணவர்கள் தொடர்பான வேறு ஏதேனும் அழுத்தமான பிரச்சனைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், ஆய்வு செய்தார்.
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ஞானியார்குடியிருப்பு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி காமராஜர்நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேலஅரசடி ஊராட்சி மேலஅரசடி புளியமரத்தரசடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார்.
மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார்.
ஆய்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் செ.சுந்தரவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


