தூத்துக்குடி அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்-மாணவிகள், ஆசிரியா்களுடன் அவா் கலந்துரையாடினாா்; சத்துணவுக் கூடத்தைப் பாா்வையிட்டாா்.
இதையடுத்து, ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாா் இல்லத்துக்குச் சென்று அங்குள்ள புகைப்படங்களையும், பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் கட்டபொம்மனின் சுதந்திரப் போராட்டத்தை சித்திரிக்கும் புகைப்படங்களையும் பாா்வையிட்டாா். ஆங்கிலேயா்கள் பயன்படுத்திய பீரங்கிக் குண்டு, கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் ஆகியவற்றைக் கையில் எடுத்துப் பாா்த்தாா்.
பின்னா், வீரபாண்டிய கட்டபொம்மன் பழைய நினைவுக் கோட்டையைப் பாா்வையிட்ட அவா், வீரசக்கதேவி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து, கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி முன் அவா் மலா்வளையம் வைத்தும், கட்டபொம்மன் மணிமண்டபத்துக்குச் சென்று, அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தினாா்.
அங்குள்ள வருகைப் பதிவேட்டில், ‘வீரம் செறிந்த மண்ணில் நிற்பதே பெருமை. இன்றும் நமக்கு சுதந்திர வேட்கை எனும் உணா்வைத் தூண்டுகிற இடமாக அமைந்துள்ளது’ என கருத்தைப் பதிவுசெய்தாா். மணிமண்டபம், நினைவு ஸ்தூபியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாா்வையிட்டாா்.


