பாளையங்கோட்டையில் நூற்றாண்டு மண்டபம் அருகே மாம்பழச் சங்கம் என்றொரு பண்டிகை நடைபெறும். இது வித்தியாசமான பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறுகிறது. இது தோன்றியது ரேனியஸ் அடிகளார் காலத்தில் தான். 1825&ல் ரேனியஸ் அடிகளாரின் போதனையை ஏற்று நமது பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிறிஸ்து மத்தியில் ஐக்கியம் ஆனார்கள். இதனால் இவர்கள் நாகரிகமாக மாறினர். கொத்தடிமை தனத்திலிருந்து விடுபட்டனர்.
இவ்வேளையில் ஆனி மாதம் தோறும் குரங்கணி முத்துமாரியம்மன் கோவிலில் ஆனித் திருவிழா மிக விமர்சையாக நடக்கும். இவ்வூரில் பலர் மாட்டு வண்டி கட்டிக் குடும்பத்துடன் வந்து வீட்டுக்கு ஒரு ஆட்டுக்கடா வெட்டி படைத்து உண்பார்கள். அறுவடை முடிந்து நடைபெறும் இவ்விழா ஆற்று மணலில் தலை வைத்துப் படுத்து வானத்தைப் பார்த்து மகிழ்வார்கள். பின்பு சந்தோஷமாக உறங்கி போவார்கள்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். குரங்கணிக்குச் சந்தோஷமாகச் செல்லும் மக்களில் புதிதாகக் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் என்ன செய்வார்கள். அவர்களும் இதே போல் ஒரு பண்டிகை வர வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதே மாம்பழச்சங்கம்.
இதற்கிடையில் விதவை நலச்சங்கம் ஒன்றை ரேனியஸ் அடிகளார் ஏற்படுத்தி அதன் சங்க விழாவை 9.3.1834 புதன்கிழமை அன்று பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடத்தினார்.
இந்த நாளில் அனைத்து பகுதியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் வில் வண்டி கட்டி பாளையங்கோட்டை வந்து சேர்ந்தனர். சிலர் மாட்டு வண்டியில் குரங்கணிக்குச் செல்வது போலவே கொட்டகை கட்டி வந்தனர். கூட்டத்தில் ஆராதனை நடைபெற்றது. அவ்வேளை மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் வந்து குவிந்தது. கொக்கிரகுளம், தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு மாம்பழச் சங்கத்தில் கலந்து கொள்ள மக்கள் ஆர்வமாக வந்தனர். கூட்டம் அதிகரித்தது.
பெரும்பாலுமே திருவிழாவில் பெண் மாப்பிள்ளை பார்த்து ஒழுங்கு செய்வது வழக்கம். இது குரங்கணி அம்மன் கோவிலில் தொடர்ந்து நடைபெற்றது. அதே பணியை மாம்பழச் சங்கத்திலும் நடத்தினார்கள். பெரும்பாலுமே Ôநாடார்Õ சமுதாய மக்களே கிறிஸ்தவ மதத்தில் மிக அதிகமாக மனம் மாறினர். அவர்கள் திருமணத்தை நிச்சயிக்க மாம்பழச் சங்கத்தை நிர்ணயித்தனர். ஆகவே வாலிபப் பெண்கள். ஆண்கள் மிக அதிகமாக மாம்பழச் சங்கத்திற்கு வருவார்கள். எனவே “மாப்பிள்ளை சங்கம்” என்று அழைக்கப்பட்டது.
ரேனியஸ் அடிகளார் மறுவாழ்விற்காக இச்சங்கத்தை ஆரம்பித்தார். ஆகவே “கைம்பெண்கள் சங்கம்” என்றும் அழைக்கப்பட்டது.
இதே வேளையில் இங்கு வரும் மக்கள் ஏழைகளுக்கு தானம் வழங்கி மகிழ்ந்து வந்தனர். இங்கு 3 நாட்களுக்கு முன்பே பிச்சைக்காரர்கள் இங்கு இருபுறமும் துண்டைவிரித்து 1 முதல் 4 நாட்கள் ஊன்> உறக்கம் இன்றி காத்துக்கிடப்பார்கள்.
இவர்களுக்கு வரும் மக்கள் காசு> பணம்> அரிசி மற்றும் காய்கறி போட்டு மகிழ்ந்தனர். இதற்காக நேர்ச்சைகளை மக்கள் சேர்த்து எடுத்து வருவார்கள். குரங்கணி கோவிலில் மொட்டை போட்டு நேர்த்தி கடன் செலுத்துவதைப் போல் இங்கே நேர்த்தி கடன் செலுத்துவதற்காகச் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் கைம்பெண்கள் சங்கம், மாப்பிள்ளை சங்கம் என அழைக்கப்பட்டு எதிர்காலத்தில் மாம்பழச் சங்கம் என்று நிலைத்து விட்டது.
இந்தச் சங்கம் நடைபெறும் இடத்தில் காளிமார்க் அருகில் ஒரு சந்து முருகன்குறிச்சி பகுதிக்குச் செல்கிறது. அந்தத் தெருவிற்கு ரேனியஸ் தெரு என்று பெயர். அங்கு தான் ரேனியஸ் அடிகளார் கல்லறை உள்ளது. ரேனியஸ் அடிகளார் அடக்கமானாலும் கூட ஆண்டுதோறும் மாம்பழச் சங்கத்தினரைப் பார்த்து திருப்தி அடைவது போல் உணர்வு இவ்வேளையில் இங்கு வந்தால் தோன்றுகிறது.
மாம்பழச்சங்கம் வரும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நல்ல கல்விப்பணி> இறைப்பணி மற்றும் இன்று வாழ்க்கைத் தரம் உயர அடிக்கல் இட்ட ரேனியஸ் அடிகளார் என்பதை உணர்ந்து இக்கல்லறை சென்று வருவது மிக மிக முக்கியமானதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


