தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்றும் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வரும் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார்.


