பன்னம்பாறை யில் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விளையாடிய பழமையான பல்லாங்குழி கண்டுபிடிப்பு
தூத்துக்குடிமாவட்டம் சாத்தான்குளம் அருகே -சாத்தான்குளம்- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது -பன்னம்பாறை சிற்றூர். தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
தொல்காப்பியம் நூலிற்கு
’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’
என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும்


