உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தமிழ்த்துறை மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை பார்வையிட வருகை தந்தனர். கல்லூரி முதல்வர் முனைவர்.அருள்ராஜ் பொன்னுதுரை அனுமதியுடன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.அந்தோணி செல்வகுமார் தலைமையில் பேரா.ராஜலெட்சுமி, பேரா.ஜெயசுதா மற்றும் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவ மாணவிகள் இந்த குழுவில் இடம் பெற்றனர்.
ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர். அகழாய்வு பணிகள் குறித்து ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கரிடம் கேட்டறிந்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அகழாய்வுகள் குறித்து விளக்கமளித்தார்.
முன்னதாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சென்று அங்கு ஆதிச்சநல்லூர் பொருள்களை பார்வையிட்டனர். மாணவர்களுக்கு காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி விளக்கமளித்தார்.


